இறையேசுவில் அன்புள்ளவர்களே! வணக்கம், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த வலைப்பதிவு மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். . பணி. ஸடீபன்.
RSS
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - 17.07.2010 - மறைபணி நிலையம், குடந்தை!

Thursday, July 15, 2010

From the Secretary

இறையேசுவில் அன்புள்ள அருள்பணியாளர்களே!
பள்ளித் தாளாளர்களே! அருள் சகோதர, சகோதரிகளே!
பள்ளி முதல்வர்களே! இருபால் ஆசிரியப் பெருமக்களே!

வணக்கம், உங்கள் அனைவருக்கும் எனது உளநிறை செபவாழ்த்துக்கள்.  இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இச்சுற்றுமடல் மூலம் உங்களைச் சந்திப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.

நல்ல மனிதர்களை சந்திப்பது கடவுளை சந்திப்பதற்கு சமம். நான் கடவுளை சந்தித்தேன் என்று எப்போது நம் சமுதாயம் சொல்லப் போகிறது?  வளர்ந்து வரும் இளம் பிஞ்சு உள்ளங்களில் ஆடை கட்டாத ஆசைகளை கட்டிவிட்டது யார்? அராஜகமா? அன்றாட தொல்லைகாட்சிகளா (தொலைகாட்சிகளா)? சமூக நிகழ்வுகளா?  எதைச் சொல்ல. எது எப்படியோ, பொறுப்பு நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருபால் ஆசிரிய பெருமக்களே!
‘கள்ளமில்லா நெஞ்சம் வேண்டும்,
களித்து உலகில் வாழ வேண்டும்,

உள்ளத்தில் நேர்மை வேண்டும்,
உண்மையை பேச வேண்டும்.’
என்று நன்னெறியாம் அறநெறியை சிறப்பாக பயிற்றுவிக்றீர்கள்.

இளம் பிஞ்சுகளை இறைவனோடு ஒப்புரவு (அன்புறவு) செய்ய வழி வகுக்கும் காலம், இந்த பள்ளி பருவம் என்பதை உணர்ந்து செயல்படுகிறீர்கள்.

அதற்காக உங்களை வாழ்த்துகின்றேன். இறைவனுக்கு நன்றி  சொல்ல பலக் காரணங்கள் உண்டு. இருபால் ஆசிரிய பெருமக்களே உங்களுக்கு நன்றிச் சொல்ல ஒரு காரணம் தான் உண்டு.

இளம் சமுதாயத்தை இறைவனுக்கும் இயற்கைக்கும் ஏற்றவர்களாய் வார்ப்பதுதான். வார்த்தெடுங்கள், செதுக்குங்கள் என்று வாழ்த்துகிறேன் பன்முறை. என்னோடு தோள் கொடுத்து ஒத்துழைக்கும் அருட்சகோதரிகள், வேதியர்கள் அனைவருக்கும் நன்றியும் செபங்களும்.

சிந்தனைக்கு சில வரிகள் :-
தன் மனசாட்சியை நோக்காதவன் குருடன்;
அதன் வழி நடக்காதவன் முடவன்
- பதுவை அந்தோணியார்.
நல்ல மனசாட்சி இறைவனின் இருப்பிடம்;
மகிழ்ச்சியின் மறைவிடம்.
- புனித அகுஸ்தீனார்.
நான் என்னுடைய மனசாட்சியை மகிழ்ச்சிப்படுத்துவேன்;
ஏனெனில் அதுதான் கடவுள்
- காந்தி.
சிந்திப்போம் கரம் கோர்ப்போம்...
வருகின்ற கல்வி ஆண்டிலே இன்னும் சிறப்பாக செய்ய இறைவனின் துணை வேண்டுவோம். இறைவன் நம்மை வழி நடத்துவார்.
ஜெயம் நமதே.
தங்கள் அன்புள்ள
அருள்தந்தை ஸ்டீபன்.

0 comments:

Post a Comment