இறையேசுவில் அன்புள்ளவர்களே! வணக்கம், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த வலைப்பதிவு மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். . பணி. ஸடீபன்.
RSS
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - 17.07.2010 - மறைபணி நிலையம், குடந்தை!

Thursday, July 15, 2010

ஆயரின் ஆசிரும் வாழ்த்துக்களும்...

அருள் தந்தையர்களே, அருட்சகோதரிகளே, இருபால் ஆசிரிய பெருமக்களே!
உங்கள் அனைவரையும் இச்சுற்றறிக்கை மூலம் சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அது மனித குலத்தை வளமுள்ளதாகச் செய்கிறது. அறிவியல் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆன்மிகமும், அறநெறியும் தனி மனித வளர்ச்சிக்கு அவசியம்.
எனவே மறைக்கல்வியையும், நன்னெறியையும் மாணவ, மாணவிகளுக்கு திறம்படக் கற்பியுங்கள். மதிப்பீட்டுக் கல்வியும் உங்கள் இடம் தேடி வந்து, ஆளுமைத் தன்மை, குறிக்கோள், பதின்பருவ உடல், உள்ள வளர்ச்சி ... போன்ற தலைப்புகளில் வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளைக் கற்பிக்கின்றது.
நீங்கள் அனைவரும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். “பச்சிலையோ, களிம்போ அவர்களுக்கு நலம் தரவில்லை. ஆனால் ஆண்டவரின் வார்த்தை நலமளித்தது”
(சா ஞா 16 : 12 ) என்று சாலமோனின் ஞான நூல் கூறுகிறது.
ஆசிரிய பெருமக்களே! நீங்கள் நலமளிப்பவர்கள். மாணவ, மாணவிகளுக்கு சிறந்த நற்செய்தியாளர்களாகத் திகழுங்கள்; அவர்களை நலம் பயப்பவர்களாக மாற்றுங்கள். இறைவன் உங்கள் மீது அருளுக்கு மேல் அருளையும், வாழ்வுக்கு மேல் வாழ்வையும் பொழிவாராக!
உங்கள் பணி சிறக்க எனது ஆசிரும், செபங்களும்.

என்றும் அன்புடன்,


(F.அந்தோனிசாமி)
குடந்தை ஆயர்.

0 comments:

Post a Comment