இறையேசுவில் அன்புள்ளவர்களே! வணக்கம், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த வலைப்பதிவு மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். . பணி. ஸடீபன்.
RSS
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - 17.07.2010 - மறைபணி நிலையம், குடந்தை!

Thursday, July 15, 2010

திருமறைச்சுவடி, திருப்பலி பூசையின் செபங்கள் :

இளம் பிஞ்சு உள்ளங்களில் கத்தோலிக்கத் திருமறைச் செபங்கள் ஆழமாகப் பதிக்கப்படல் வேண்டும். எனவே ஒன்று முதல் நான்கு வரை படிக்கும் கத்தோலிக்க மாணவ, மாணவியர் திருமறைச்சுவடி மற்றும் திருப்பலி பூசையின் செபங்களைப் படித்து மனப்பாடம் செய்யச் செய்தல் வேண்டும். இதன் காரணமாக முதல் வகுப்புகளுக்கான மறைக்கல்விப் புத்தகங்களோடு திருப்பலி மற்றும் திருமறைச்சுவடி புத்தங்களையும் பயன்படுத்தவும்.

மறைக்கல்வி - நன்னெறிக்கல்விப் பாடவேளை :

கடந்த ஆண்டைப் போலவே அனைத்து பள்ளிகளிலும் காலை 9.15 முதல் 9.45 வரை மறைக்கல்வி நன்னெறிக்கல்வி பாடங்கள் தினமும் நடத்தப்பட வேண்டும்.

மறைக்கல்வி நன்னெறிக்கல்வி தொடர்பாளர் :

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஓர் ஆசிரியர் மறைக்கல்வி - நன்னெறிக்கல்வி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டு புத்தக வினியோகம் செய்யும் வேளையிலோ அல்லது அதற்கு முன்பாகவோ கடிதமாகவோ அல்லது தொலைபேசியிலோ தங்களுடைய பெயரையும்
தொலைபேசி எண்ணையும் எங்களுக்கு தெரிவிக்கும்படி  கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை வசூல் :

கடந்த ஆண்டைப் போலவே மறைக்கல்வி - நன்னெறிக்கல்வி செயல்பாட்டினுக்காக ரூ.1/- மறைக்கல்விப் பணிக்குழுவே வசூல் செய்யும். எனவே அனைத்து (தமிழ்வழி, ஆங்கில வழி) பள்ளி மாணவ / மாணவிகளும் ரூ.1/- யை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். இத்தொகையினை புத்தகம் வாங்கும் பொழுதே செலுத்திடவும்.



பள்ளி ஆண்டாய்வு :

பள்ளி ஆண்டாய்வு நேரத்தில் பணிக்குழுவினரை வரவேற்றல் உபசரித்தல் அனைத்தும் பாராட்டுகுரியது. ஆண்டாய்விற்குரிய தயாரிப்பு சிறப்பாக அமைதல் வேண்டும்.  துணைக்கருவிகள் அதிகளவில் பயன்படுத்தலாம். ஆண்டாய்வு நோட்டு அடிக்கடி மாற்றப்படக்கூடாது.

பொதுத்தேர்வு மற்றும் சிறப்புத் தேர்வுகள் : 

கடந்த ஆண்டைப் போலவே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்ளவும். பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாள்கள், சிறப்புத் தேர்வுக்குரிய வினா மற்றும் விடைத்தாள்களை மறைக்கல்விப் பணிக்குழு அளிக்கும். இவற்றிற்குரிய கட்டணமாக மாணவர் ஒருவருக்கு ரூ. 1/- (ஒன்று மட்டும்) வழங்கிடல் வேண்டும். பொதுத் தேர்வு 04.12.2010 அன்றும் சிறப்பு தேர்வு 08.01.2011 அன்றும் நடைபெறும்.

0 comments:

Post a Comment