Tuesday, November 23, 2010
Thursday, July 15, 2010
ஆயரின் ஆசிரும் வாழ்த்துக்களும்...
அருள் தந்தையர்களே, அருட்சகோதரிகளே, இருபால் ஆசிரிய பெருமக்களே!
உங்கள் அனைவரையும் இச்சுற்றறிக்கை மூலம் சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அது மனித குலத்தை வளமுள்ளதாகச் செய்கிறது. அறிவியல் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆன்மிகமும், அறநெறியும் தனி மனித வளர்ச்சிக்கு அவசியம்.
எனவே மறைக்கல்வியையும், நன்னெறியையும் மாணவ, மாணவிகளுக்கு திறம்படக் கற்பியுங்கள். மதிப்பீட்டுக் கல்வியும் உங்கள் இடம் தேடி வந்து, ஆளுமைத் தன்மை, குறிக்கோள், பதின்பருவ உடல், உள்ள வளர்ச்சி ... போன்ற தலைப்புகளில் வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளைக் கற்பிக்கின்றது.
நீங்கள் அனைவரும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். “பச்சிலையோ, களிம்போ அவர்களுக்கு நலம் தரவில்லை. ஆனால் ஆண்டவரின் வார்த்தை நலமளித்தது”
(சா ஞா 16 : 12 ) என்று சாலமோனின் ஞான நூல் கூறுகிறது.
ஆசிரிய பெருமக்களே! நீங்கள் நலமளிப்பவர்கள். மாணவ, மாணவிகளுக்கு சிறந்த நற்செய்தியாளர்களாகத் திகழுங்கள்; அவர்களை நலம் பயப்பவர்களாக மாற்றுங்கள். இறைவன் உங்கள் மீது அருளுக்கு மேல் அருளையும், வாழ்வுக்கு மேல் வாழ்வையும் பொழிவாராக!
உங்கள் பணி சிறக்க எனது ஆசிரும், செபங்களும்.
என்றும் அன்புடன்,
(F.அந்தோனிசாமி)
குடந்தை ஆயர்.
From the Secretary
இறையேசுவில் அன்புள்ள அருள்பணியாளர்களே!
பள்ளித் தாளாளர்களே! அருள் சகோதர, சகோதரிகளே!
பள்ளி முதல்வர்களே! இருபால் ஆசிரியப் பெருமக்களே!
வணக்கம், உங்கள் அனைவருக்கும் எனது உளநிறை செபவாழ்த்துக்கள். இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இச்சுற்றுமடல் மூலம் உங்களைச் சந்திப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.
நல்ல மனிதர்களை சந்திப்பது கடவுளை சந்திப்பதற்கு சமம். நான் கடவுளை சந்தித்தேன் என்று எப்போது நம் சமுதாயம் சொல்லப் போகிறது? வளர்ந்து வரும் இளம் பிஞ்சு உள்ளங்களில் ஆடை கட்டாத ஆசைகளை கட்டிவிட்டது யார்? அராஜகமா? அன்றாட தொல்லைகாட்சிகளா (தொலைகாட்சிகளா)? சமூக நிகழ்வுகளா? எதைச் சொல்ல. எது எப்படியோ, பொறுப்பு நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருபால் ஆசிரிய பெருமக்களே!
‘கள்ளமில்லா நெஞ்சம் வேண்டும்,
களித்து உலகில் வாழ வேண்டும்,
உண்மையை பேச வேண்டும்.’
என்று நன்னெறியாம் அறநெறியை சிறப்பாக பயிற்றுவிக்றீர்கள்.
இளம் பிஞ்சுகளை இறைவனோடு ஒப்புரவு (அன்புறவு) செய்ய வழி வகுக்கும் காலம், இந்த பள்ளி பருவம் என்பதை உணர்ந்து செயல்படுகிறீர்கள்.
அதற்காக உங்களை வாழ்த்துகின்றேன். இறைவனுக்கு நன்றி சொல்ல பலக் காரணங்கள் உண்டு. இருபால் ஆசிரிய பெருமக்களே உங்களுக்கு நன்றிச் சொல்ல ஒரு காரணம் தான் உண்டு.
இளம் சமுதாயத்தை இறைவனுக்கும் இயற்கைக்கும் ஏற்றவர்களாய் வார்ப்பதுதான். வார்த்தெடுங்கள், செதுக்குங்கள் என்று வாழ்த்துகிறேன் பன்முறை. என்னோடு தோள் கொடுத்து ஒத்துழைக்கும் அருட்சகோதரிகள், வேதியர்கள் அனைவருக்கும் நன்றியும் செபங்களும்.
சிந்தனைக்கு சில வரிகள் :-
தன் மனசாட்சியை நோக்காதவன் குருடன்;
அதன் வழி நடக்காதவன் முடவன்
- பதுவை அந்தோணியார்.
நல்ல மனசாட்சி இறைவனின் இருப்பிடம்;
மகிழ்ச்சியின் மறைவிடம்.
- புனித அகுஸ்தீனார்.
நான் என்னுடைய மனசாட்சியை மகிழ்ச்சிப்படுத்துவேன்;
ஏனெனில் அதுதான் கடவுள்
- காந்தி.
சிந்திப்போம் கரம் கோர்ப்போம்...
வருகின்ற கல்வி ஆண்டிலே இன்னும் சிறப்பாக செய்ய இறைவனின் துணை வேண்டுவோம். இறைவன் நம்மை வழி நடத்துவார்.
ஜெயம் நமதே.
தங்கள் அன்புள்ள
அருள்தந்தை ஸ்டீபன்.
இறையியல் பயிற்சி கருத்தரங்கு :
9. 04.30 தேனீர்
பள்ளி ஆண்டாய்வு :
பள்ளி ஆண்டாய்வு நேரத்தில் பணிக்குழுவினரை வரவேற்றல் உபசரித்தல் அனைத்தும் பாராட்டுகுரியது. ஆண்டாய்விற்குரிய தயாரிப்பு சிறப்பாக அமைதல் வேண்டும். துணைக்கருவிகள் அதிகளவில் பயன்படுத்தலாம். ஆண்டாய்வு நோட்டு அடிக்கடி மாற்றப்படக்கூடாது.
பொதுத்தேர்வு மற்றும் சிறப்புத் தேர்வுகள் :
கடந்த ஆண்டைப் போலவே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்ளவும். பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாள்கள், சிறப்புத் தேர்வுக்குரிய வினா மற்றும் விடைத்தாள்களை மறைக்கல்விப் பணிக்குழு அளிக்கும். இவற்றிற்குரிய கட்டணமாக மாணவர் ஒருவருக்கு ரூ. 1/- (ஒன்று மட்டும்) வழங்கிடல் வேண்டும். பொதுத் தேர்வு 04.12.2010 அன்றும் சிறப்பு தேர்வு 08.01.2011 அன்றும் நடைபெறும்.
மறைக்கல்வி நன்னெறிக்கல்வி புத்தக வினியோகம் :
மதிப்பீட்டுக் கல்வி - Value Education
ஆளுமை பண்புகள்.மதிப்பீட்டுக்கல்வி நடத்தும் உரையாளர்களுக்கு T.A. கொடுக்க வேண்டியுள்ளதால் தாங்கள் குறைந்த பட்சம் ரூ. 1500/- கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மதிப்பீட்டுக்கல்வி நடைபெறும் பள்ளிகளும் நாட்களும் அட்டவணையைக் காண்க.
குறிக்கோள்.
பதின்பருவத்தின் உடல் உள்ள வளர்ச்சி.
சமூகத் தொடர்பு சாதனங்களின் தாக்கம்.
வாழ்க்கை மதிப்பீடுகள்.(தனிமனித வாழ்வில் ஆன்மீக வாழ்வில்)
- 26.06.2010 அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி
- 03.07.2010 புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, புறத்தாக்குடி.
- 10.07.2010 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,குடந்தை.
- 17.07.2010 புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, இலால்குடி.
- 24.07.2010 அலங்கார அன்னை மேல்நிலைப் பள்ளி,வரதராஜன் பேட்டை.
- 31.07.2010 புனித அன்னை லூர்து மேல்நிலைப் பள்ளி,தென்னூர்.
- 07.08.2010 தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,வரதராஜன் பேட்டை.
- 14.08.2010 புனித பாத்திமா மேல்நிலைப் பள்ளி,ஜெயங்கொண்டம்.
- 21.08.2010 புனித பிலேமினா மேல்நிலைப் பள்ளி, குழுமூர்.
- 28.08.2010 புனித நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,அரியலூர்.
- 04.09.2010 திருஇருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி,மிக்கேல்பட்டி.
- 11.09.2010 புனித தோமினிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
- 09.10.2010 சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, அன்னமங்கலம்.
- 23.10.2010 அன்னை லூர்து மேல்நிலைப் பள்ளி.கோட்டப்பாளையம்.
- 30.10.2010 புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி,வடுகர்பேட்டை.
- 13.11.2010 புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி, விரகாலூர்.
- 20.11.2010 புனித கபிரியேல் மேல்நிலைப் பள்ளி,பசுபதி கோவில்
- 27.11.2010 சிறுமலர் மேல்நிலைப்பள்ளி. குடந்தை